tHANKS Gomathi Ashokkumar: ON INFO ONபௌமாஸ்வினி பௌமாஸ்வினி நாளில் அம்பிகை வழிபாடு அளப்பரிய நன்மைகளை தரும். சில நட்சத்திரங்களும் கிழமைகளும் சேரும் போது, அந்த நாட்கள் அமிர்த சித்தி யோக தினங்கள் என்று சொல்லப்படுகின்றன. அப்படிப்பட்ட விசேஷமான புண்ணிய தினங்களில் தெய்வங்களை பூஜித்தால் மிகுந்த பலன் கிடைக்கும். அந்த வகையில் ஒரு சிறப்பு தினம் தான் பௌமாஸ்வினி. பௌமன் என்றால் பூமியின் புதல்வரான செவ்வாய்க் கிரகத்துக்கு பெயர். செவ்வாய் கிரகத்தின் கிழமையான செவ்வாய்க்கிழமையும், அஸ்வினி நட்சத்திரமும் ஒன்றாக இணையும் நாள் பௌமாஸ்வினி புண்யகாலம் எனப்படுகிறது.அம்பாளின் வழிபாட்டுக்கு அருமையான நாள் ஆகும்.மிகவும் அரிதான இந்த நன்னாளில் செய்யப்படும் அனைத்து நற்செயல்களும் அதிகமான நன்மையைத் தரும். அம்பாளின் வழிபாட்டுக்கு ஏற்ற நாள். வருடத்துக்கு சில நாட்களே இந்த அமைப்பு வரும். அன்று கோயிலில் அர்ச்சனை அபிஷேகம், வீட்டில் ஹோமம் போன்றவைக ளை செய்யலாம். பௌமாஸ்வினி நன்னாளில் செய்யப்படும் அனைத்து நற்செயல்களும் அதிகமான நன்மையைத் தரும். அன்று வடகிழக்கு மூலையில், பலகையில் கோலமிட்டு, அதன்மேல் தீபம் ஏற்றி, ஒன்பது முறை `