ஜ்வலந்தி தேஜஸா யஸ்ய ( MATA IN RS COLONY TEMPLE)
tHANKS Gomathi Ashokkumar: ON INFO ONபௌமாஸ்வினி
பௌமாஸ்வினி நாளில் அம்பிகை வழிபாடு அளப்பரிய நன்மைகளை தரும்.
சில நட்சத்திரங்களும் கிழமைகளும் சேரும் போது, அந்த நாட்கள் அமிர்த சித்தி யோக தினங்கள் என்று சொல்லப்படுகின்றன. அப்படிப்பட்ட விசேஷமான புண்ணிய தினங்களில் தெய்வங்களை பூஜித்தால் மிகுந்த பலன் கிடைக்கும். அந்த வகையில் ஒரு சிறப்பு தினம் தான் பௌமாஸ்வினி.
பௌமன் என்றால் பூமியின் புதல்வரான செவ்வாய்க் கிரகத்துக்கு பெயர். செவ்வாய் கிரகத்தின் கிழமையான செவ்வாய்க்கிழமையும், அஸ்வினி நட்சத்திரமும் ஒன்றாக இணையும் நாள் பௌமாஸ்வினி புண்யகாலம் எனப்படுகிறது.அம்பாளின் வழிபாட்டுக்கு அருமையான நாள் ஆகும்.மிகவும் அரிதான இந்த நன்னாளில் செய்யப்படும் அனைத்து நற்செயல்களும் அதிகமான நன்மையைத் தரும்.
அம்பாளின் வழிபாட்டுக்கு ஏற்ற நாள். வருடத்துக்கு சில நாட்களே இந்த அமைப்பு வரும். அன்று கோயிலில் அர்ச்சனை அபிஷேகம், வீட்டில் ஹோமம் போன்றவைக ளை செய்யலாம்.
பௌமாஸ்வினி நன்னாளில் செய்யப்படும் அனைத்து நற்செயல்களும் அதிகமான நன்மையைத் தரும். அன்று வடகிழக்கு மூலையில், பலகையில் கோலமிட்டு, அதன்மேல் தீபம் ஏற்றி, ஒன்பது முறை ``துர்கா சப்த ஸ்லோகி’’ பாராயணம் செய்ய வேண்டும்.ஒவ்வொரு பாராயணம் முடியும் போது, ஒரு பிரதட்சண நமஸ்காரம் செய்ய வேண்டும். இப்படியாக ஒன்பது முறை செய்ய வேண்டும்.
இந்த நாள், ஸ்ரீலட்சுமி நரசிம்மருக்கு உரிய நாள். ஜோதிட சாஸ்திரப்படி செவ்வாய் தோஷ நிவர்த்திக்காக லக்ஷ்மி நரசிம்மரை வழிபட வேண்டும். இந்த நன்னாளில் மகா விஷ்ணுவான யோக நரசிம்மரை பூஜித்து, நரசிம்ம ஸ்தோத்திரங்களை உச்சாடனம் செய்தால் வீரம் தோன்றும், சரீர பலம் கூடும், மனோபலம் ஏற்படும், சத்ரு பயம் நீங்கும்.
ஜ்யோதீம் ஷ்யர்கேந்து நட்சத்ர
ஜ்வலநாதீந் யநுக்ரமாத்
ஜ்வலந்தி தேஜஸா யஸ்ய
தம் ஜ்வலந்தம் நமாம்யஹம்
என்ற ஸ்தோத்திரத்தை 9 முறை சொல்லவும்.
ஒரு ஜாதகத்தில் செவ்வாய் தோஷம் இருந்தால், அந்த தோஷ நிவர்த்திக்கான, வழிபாட்டுக்குரிய நாளாக இந்த நாளைக் கருதுகின்றனர். எத்தனை முயன்றாலும் தனக்குரிய ஒரு நிலத்தையோ வீட்டையோ கட்ட முடியாதவர்கள் இந்த விரதம் இருப்பதன் மூலமாக விரைவில் நிலம் வாங்கி வீடு கட்டலாம்.
செவ்வாய், இரத்தத்தைக் குறிக்கின்றவர் என்பதால் இரத்தக் குறைபாடு நோய் உள்ளவர்கள் இந்த விரதத்தை அனுஷ்டித்து நோயிலிருந்து விடுதலை பெறலாம்.
அஸ்வினி நட்சத்திரம் என்பது மேஷ ராசியில் உள்ள நட்சத்திரம். அந்த மேஷ ராசி, செவ்வாயின் ஆட்சிவீடு. இப்படிப்பட்ட நாளில் லட்சுமி நரசிம்மரை வழிபட்டால் செவ்வாய் தோஷங்கள் விலகும். உடல் ஆரோக்கியமாக இருக்கும்.தனலாபமும், பூமிலாபமும் ஏற்படும். சகோதர ஒற்றுமை ஒங்கும். மனோபலம் கூடும். சத்ரு பயம் நீங்கும்.
இந்த நாளில் அம்பிகை வழிபாடும் அளப்பரிய நன்மைகளை தரும்.அந்த நாளில் பராசக்தியை பூஜை, மஞ்சள் குங்குமம் தானம் செய்வது, லலிதா சஹஸ்ரநாமம், துர்கா சந்திரகலா ஸ்துதி, சௌந்தர்ய லஹரி போன்ற ஸ்தோத்திரங்களின் பாராயணம், நைவேத்யம் முதலியவற்றால் திருப்தி செய்து, இடர்களை போக்கிக் கொண்டு, சுகாதாரமும், பொருளாதாரமும் மேம்பட்டு, சந்தோஷ வாழ்க்கையை அடையலாம்
அன்னையிடம் கேட்க ஆயிரம் விஷயங்கள் இருக்குமே எதை கேட்பது எதை விடுவது என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால் அன்னையை சரணடைந்தாலே உங்களுக்கு வேண்டியது எதுவோ அதை அவளே கொடுப்பாள். உங்களுக்கு என்ன தேவை என்பது அவளுக்கு தெரியுமே.
அன்னையை வழிபட மந்திரம் ஸ்தோத்திரம் தெரிய வேண்டியதில்லை. பூஜையும் தியானமும் கூட தேவையில்லை. அன்னை பார்த்துகொள்வாள் என்ற நம்பிக்கை இருந்தாலே போதும். உங்கள் கோரிக்கை நிறைவேறும்.
ONE SUCH பௌமாஸ்வினி CAME ON செவ்வாய்க்கிழமை ,புரட்டாசி 24,
அக்டோபர் 11-10-2022
முருகா மருதமலை முருகா அருள் தருவாய் முருகா
Comments
Post a Comment