4 YAMAMS ( காலம்)

Every body knos Shiv rathri. It was yesterday this year. Kashmir to kanyakumari in all the temples this was observed with 4 yama pooja.Many came in live. Rush to visit any shiva temple Like wise Swayambhu Mamaarathuadi vinaya is famou for all ritials in view of the Temple Shivachariar "R.S Muthukumara sivachariar. He has come up with the Explanation each and every Yama pooja. Most important, cut and keep. Or Do not forget this next March. ============== ======================= ======================= R.S.Muthukumaran: முதல் கால பூஜை : பிரம்ம தேவர் சிவனை பூஜித்த காலமே முதல் கால பூஜை எனப்படுகிறது. இதற்கு பிரம்ம பூஜை காலம் என்று பெயர். இந்த காலத்தின் போது சிவ பெருமானுக்கு நல்லெண்ணை கொண்டு அபிஷேகம் செய்யப்படும். நல்லெண்ணெய் காப்பு அல்லது சந்தனாதி தைலம் கொண்டு காப்பு சாற்றப்படும். அபிஷேகத்தின் போது முதலில் சுவாமிக்கு எண்ணெய் காப்பு சாற்ற வேண்டும் என்பது விதி. இதன் படி முதலில் எண்ணெய் காப்பு, அதற்கு பிறகு பால் சார்ந்த பொருட்களை கொண்டு அபிஷேகம் செய்ய வேண்டும். பால், நெய், தயிர் ஆகிய பொருட்களைக் கொண்டு அபிஷேகம் செய்யலாம். பஞ்சகவ்யமாக சேர்த்தும் அபிஷேகம் செய்யலாம். நைவேத்தியமாக வெண்பொங்கல் படைக்கலாம். அனைத்து மலர்களும் முதல் கால பூஜைக்கு பயன்படுத்த உகந்தவை. எந்த மலரை பயன்படுத்தினாலும் அதோடு இரண்டு வில்வ இலையாவது வைத்து சிவனுக்கு அர்ச்சனை செய்ய வேண்டும். தீப, தூப ஆராதனை காட்டி முதல் கால பூஜையை நிறைவு செய்ய வேண்டும். பலன்கள் : மகா சிவராத்திரியன்று முதல் கால பூஜையின் போது சிவனை வழிபட்டால் பிறவிக்கு காரணமான கர்ம வினைகள் நீங்கும். பிறவா நிலை எனப்படும் முக்தி நிலை கிடைக்க சிவ பெருமான் அருள் செய்வார். R.S.Muthukumaran: இரண்டாம் கால பூஜை இரண்டாம் கால பூஜை மகா விஷ்ணுவிற்கான காலமாகும். மகாவிஷ்ணு, சிவ பெருமானை பூஜை செய்து வழிபட்ட காலமே இரண்டாம் கால பூஜை எனப்படுகிறது. மகாவிஷ்ணு வழிபட்ட நேரம் என்பதால் இரண்டாம் காலத்தில் இளநீர் கொண்டும், பஞ்சாமிர்தம் கொண்டும் அபிஷேகம் செய்ய வேண்டும். பாயசம், சர்க்கரை பொங்கல், கற்கண்டு சாதம் போன்ற இனிப்பான ஏதாவது ஒன்றை நைவேத்தியமாக படைக்கலாம். சிவ பெருமான் அபிஷேக பிரியர் என்றாலும், இரண்டாம் காலத்தில் விஷ்ணு வழிபட்ட காலம் என்பதால் இந்த சமயத்தில் சிவ பெருமானுக்கு அழகான வஸ்திரங்கள், அழகிய மலர்கள் கொண்டு அலங்கரிப்பது சிறப்பானதாகும். பலன்கள் : இரண்டாம் கால பூஜையின் போது சிவனை வழிபட்டால் சகல சம்பந்துக்களும் உண்டாகும். மகாவிஷ்ணு பூஜை செய்த காலம் என்பதால் மகாவிஷ்ணுவின் அருளும், அவரின் திருமார்பில் எப்போதும் நிரந்தரமாக குடியிருக்கும் மகாலட்சுமியின் அருளும் பரிபூரணமாகக் கிடைக்கும். இதனால் செல்வ வளம் பெருகும். வீட்டில் லட்சுமி கடாட்சம் நிறைந்திருக்கும். R.S.Muthukumaran: மூன்றாம் கால பூஜை சிவராத்திரியின் மூன்றாம் கால பூஜை மிக முக்கியமான பூஜையாகும். இது சிவனின் உடலில் சரி பாதியை பெற்று, சிவனின் பாதி யாக விளங்கும் அன்னை பராசக்தி, சிவ பெருமானை பூஜை செய்து வழிபட்ட காலமாகும். முதல் இரண்டு கால பூஜை செய்ய முடியவில்லை, சிவ ராத்திரியன்று முழு இரவும் கண் விழிக்க முடியவில்லை என்பவர்கள் கூட மூன்றாம் கால பூஜையின் போது மட்டுமாவது சிவனை வழிபட்டு, கண் விழித்து சிவ சிந்தனையில் இருந்தால் முழு இரவும் சிவனை வழிபட்ட பலன் கிடைக்கும். சிவராத்திரியின் மூன்றாம் கால பூஜைக்கு லிங்கோத்பவ காலம் என்று பெயர். அம்பாள் பூஜை செய்த இந்த காலத்தில் தான் சிவ பெருமான் லிங்கோத்பவராக வெளிப்பட்டதாக சொல்லப்படுகிறது. இந்த காலத்தின் போது ஈசனுக்கு தேனால் அபிஷேகம் செய்து, தாழம்பூவால் அர்ச்சித்து வழிபட வேண்டும். லிங்கோத்பவராக ஈசன் காட்சி தரும் இந்த காலத்தில் மட்டுமே சிவ பூஜைக்கு தாழம்பூ பயன்படுத்தப்படும். தாழம்பூ கிடைக்காதவர்கள் ஒரே ஒரு வில்வ இலையாவது சாற்றி வழிபட வேண்டும். எள் சாதம் நைவேத்தியமாக படைக்கலாம். பலன்கள் : மூன்றாம் காலத்தில் சிவனை வழிபட்டால் என்ன வேண்டுகிறோமோ அவை அனைத்தும் கிடைக்கும். இது கருணை ரூபினி, உலகத்திற்கே தாய் என போற்றப்படும் பராசக்தி வழிபட்ட காலம் என்பதால் அம்பாளும், சுவாமியும் மனம் குளிர்ந்து என்ன வரம் கேட்டாலும் கொடுக்கக் கூடிய காலம் இந்த மூன்றாம் கால பூஜையாகும். R.S.Muthukumaran: நான்காம் கால பூஜை நான்காம் கால பூஜை என்பது முப்பத்து முக்கோடி தேவர்கள், மனிதர்கள், ரிஷிகள் என உலகில் உள்ள அனைத்து ஜீவ ராசிகளும் சிவ பெருமானை வழிபட்ட காலம். பால், பழம், பழச்சாறு, கரும்புச்சாறு ஆகியவற்றால் சுவாமிக்கு அபிஷேகம் செய்யலாம். நைவேத்தியமாக சுத்தன்னம் மட்டும் படைக்க வேண்டும். சுத்தன்னம் என்பது வெறும் வெள்ளை சாதத்தில், சிறிதளவு நெய் ஊற்றி படைப்பதாகும். பலன்கள் : சகல விதமான செல்வங்கள், அனைத்து விதமான நன்மைகளும் கிடைக்கும். என்ன நினைத்து சிவராத்திரி பூஜை செய்தோமோ அந்த வேண்டுதல் அப்படியே நிறைவேறும்.

Comments

Popular posts from this blog

Dushman Ka Mitti

ப்ரதோஷ சிறப்பு வழிபாடு

திருக்கல்யாண வைபவம்